Take a fresh look at your lifestyle.

மூத்த நடிகர்கள் மீது தனுஸ்ரீ தத்தா காட்டம்

14

மூத்த நடிகர்கள் மீது தனுஸ்ரீ தத்தா காட்டம்
விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தனுஸ்ரீ தத்தா. தொடர்ந்து பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வந்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியது, திரை உலகில் மூத்த நடிகர்கள் குறித்த எனது புரிதல் காலப்போக் கில் மாறிவிட்டது. சில புகழ்பெற்ற ஆளுமை மிக்க மூத்த நடிகர்கள் இளம் வயதினரிடம் எப்போதும் நல்ல நோக்கங்களை கொண்டி ருக்க மாட்டார்கள். வயதான நடிகர்களுக்கு போதுமான பணி கிடைக்காததால் அவர்க ளின் பார்வை இளம் தலைமுறை யினர் மீது தவறாக விழுகிறது. ஒருவரின் வயதையும் தொழில் அனுபவத்தையும் கொண்டு மதிப்பிடாமல் அவரது குண நலன்களை கொண்டே மதிப்பட வேண்டும் என காட்டமாக கூறியுள்ளார்.