பாகுபலி தேவசேனா என் ட்ரீம் கேரக்டர்: கிருத்தி ஷெட்டி
லிங்குசாமி இயக்கிய தி வாரியார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் கிருத்தி ஷெட்டி. அதன்பிறகு கார்த்தியுடன் வா வாத்தியார், பிரதீப் ரங்கநாதருடன் எல்ஐகே ஆகிய படங்களில் நடித்தார். அதோடு தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் கிருத்தி ஷெட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது, பேஷன் சிறுவயதிலேயே எனக்கு பிடித்தமான ஒன்றாக இருந்து வருகிறது. ஏனென்னில் அம்மா ஒரு பேஷன் டிசைனர். சினிமாவில் வீராங்கனை, இளவரசி போன்ற கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். பாகுபலி படத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்த தேவசேனா கேரக்டர் எப்போதும் என் கனவு கதாபாத்திரமாக இருந்து வருகிறது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் என் வீட்டில் உள்ள 4 மாத நாய் குட்டியுடன் விளையாடுவேன்.மேலும் பாரம்பரிய நடன பயிற்சியான பரதநாட்டியம்,குச்சிப்புடி கற்று இருக்கிறேன். தற்போது கதகளி கற்று வருகிறேன். தற்காப்பு கலைகளும் எனக்கு பிடிக்கும். நான் எப்போதும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி படங்களைப் பார்க்க விரும்புவேன் என்றார்.
Prev Post
Next Post