தர்மன் பட ஷூட்டில் ரஜினி 51 விழா
இந்தியத் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த், 1975-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆகஸ்ட் 15 அன்றுதான் அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியானது. இந்த ஆண்டுடன் அவர் திரைத்துறையில் நுழைந்து 51 ஆண்டு கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற இதில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, நடிகைகள் சிம்ரன் ராசி கண்ணா மற்றும் ‘தர்மன்’ படக்குழுவினர் அனைவரும் இணைந்து அவருக்கு வாழ்த்து கூறினர். அதோடு ‘ரஜினியிசம்’ என கூறி உத்வேகம் அளித்து மகிழ்ந்தனர். தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.இப்படத்தை, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.