Take a fresh look at your lifestyle.

ஜெயப்பிரகாஷை நடிகர் ஆக்கியதே நான்தான் : விக்ரமன் பேச்சு

73

ஜெயப்பிரகாஷை நடிகர் ஆக்கியதே நான்தான் : விக்ரமன் பேச்சு
மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆல் பாஸ்’‌. இதில் துஷ்யந்த் ஹீரோவாக நடிக்க, ஜனனி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெ ண்ட் நிறுவனம் சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார். வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகி யுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் இயக்குநர் விக்ரமன் பேசியது, இந்த படம் இயக்குனர் என்னை அழைத்த போது ‘யார் ஹீரோ?’ என்று கேட்டேன். அதற்கு நடிகர் ஜெயப்பிரகாஷ் மகன் என்றார். எனக்கும் அவருக்கும் சுமார் 30 வருட பந்தம் இருக்கிறது.தயாரிப்பாளராக இருந்த அவரை நடிகராக மாற்றியதே நான் தான். அந்த அளவுக்கு நானும் அவரும் நெருக்கம். இந்தப் படத்தின் டிரெய்லர், பாடல்களையும் பார்த்தேன்,மிகவும் நன்றாக இருந்தது.