மர்டர் மிஸ்ட்ரி திரில்லராக உருவாகியுள்ள ‘மாறுவேஷம் ‘
இயக்குனர் ஸ்ரீனி இயக்கத்தில், வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘மாறுவேஷம்’ படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், படம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது. இப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்று, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து தயாரித்துள்ளனர்.இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக வியானா நடித்துள்ளார். மேலும் ராம்கி, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியான், ஜார்ஜ் விஜய், இந்துமதி, மு. ராமசாமி மற்றும் செல் முருகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Next Post