‘ பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் ரிலீஸ்
இயக்குநர் இளன் இயக்கி, ஹீரோவாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல விரும்பாத மனைவியு டன் கணவர் வீட்டோடு மாப்பிள்ளை இருந்தால் என்ன விளைவுகள் என்பதை காமெடியாக படத்தில் சொல்லி உள்ளனர். வரும் 21ஆம் தேதி நெட்ஃபிலிப்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.