Take a fresh look at your lifestyle.

மகேஷ்பாபு பிறந்தநாளில் வெளியான வாரணாசி பட அப்டேட்

4

மகேஷ்பாபு பிறந்தநாளில் வெளியான வாரணாசி பட அப்டேட்
எஸ். எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ படத்தில் அவருடைய ‘ருத்ரா’ கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரின் பிறந்த நாளை முன்னிட்டு பட குழு வெளியிட்டுள்ள து. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் மகேஷ் பாபுவின் இரண்டு போட்டோக்களை படக்குழு வெளியிட்டுள் ளது. அதில் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவின் லுக் முதல் படத்திலும், கென்யாவின் மாசாய் மாரா சமவெளியில் இருப்பது போன்ற லுக் 2வது படத்திலும் பார்க்க முடிகிறது. இந்த இரண்டு புகைப்படங்களும் வாரணாசி படத்தின் ஆன்மாவை உணர்த்துகிறது. எம்.எம். கீரவாணியின் இசையில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப்படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் உலகம் முழுவதும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகிறது.