ரிலீஸ் தள்ளிப்போன நயன்தாரா படம்
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள ‘ஹாய்’ படத்தில் நயன்தாரா லீடு ரோலில் நடித்துள்ளார். அவருடன் முதன் முதலாக கவின் நடித்திருக்கிறார். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்ய,ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.பீல் குட் பேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் வரும் 14ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதே நாளில் சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் உள்ளிட்ட நிறைய படங்கள் வருவதால் ஹாய் பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இம்மாதம் 28ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Post