Take a fresh look at your lifestyle.

இயக்குனரான கொட்டாச்சி

2

இயக்குனரான கொட்டாச்சி
பல படங்களுக்கு பைனான்ஸியராக இருந்த சுரேஷ் ஜி.முத்துக்குமார், ராஜேஸ்வரி பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி அதன் முலம் முதல் முறையாக ‘மாயக் காளான்’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நடிகர் கொட்டாச்சி கதாநாயகனாக நடிப்பதோடு, படத்தை இயக்கி இயக்குனர் அவதாரமும் எடுக்கிறார். அவருடன் நாகேஷ் பேரன் கணேஷ், ரஜித், காஜேஷ், வையாபுரி, காதல் சுகுமார், கே.சி.பிரபாத், ஹரிதா, மம்முக்கா, ராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு சந்தோஷ் இசை இசை அமைக்க, ஆசிப் ஒளிப்பதிவு செய்கிறார்.சஸ்பென்ஸ், திரில்லர் படமாக உருவாகும் மாயக் காளான் படம்,கும்கி, மைனா ஆகிய படங்கள் எடுத்த குமிலியில் வேகமாக உருவாகி வருகிறது.