Take a fresh look at your lifestyle.

அரசியல் டூ சினிமா: எச். ராஜா பற்றி தமிழிசை

2

அரசியல் டூ சினிமா: எச். ராஜா பற்றி தமிழிசை
ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரிப்பில் டாக்டர் எஸ். ராஜா இயக்கி உள்ள படம் செய்! செய்யாதே!. இதில் பிஜேபி மூத்த தலைவர் எச் ராஜா மற்றும் குரு விஜய் ஆகியோருடன் ஏராளமான டாக்டர்கள் நடித்துள்ளனர். வாசு பி. ராம்நாத் ஒளிப்பதிவு செய்ய, டாக்டர் எஸ். ராஜா மற்றும் ஹரிணி சுப்பு மியூசிக் டீம் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியது, எங்களுடன் அரசியல் பயணத்தில் இருந்தவர், இன்று திரைத்துறையில் புதிய பயணத்தைத் தொடங்குகிறார். பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அரசியலில் இருந்த ஒருவர் சினிமாவுக்கு வந்து ஒரு சமூகப் பொறுப்புள்ள படத்தை உருவாக்குவது மிகவும் பாராட்டத்தக்க விஷயம்.இதில் நடித்திருக்கும் எங்கள் அண்ணன் ராஜாவுக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.