Take a fresh look at your lifestyle.

மணிகண்டன் நடிக்கும் மக்கள் காவலன்

5

மணிகண்டன் நடிக்கும் மக்கள் காவலன்
பைசன் காளமாடன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து நடிகர் மணிகண்டன் நடிக்கும் “மக்கள் காவலன்”  படத்தை  தயாரிக்கின்றனர். ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்குகிறார். இதில் முதல் முறையாக ஆக்சன் கேரக்டரில் மணிகண்டன் நடிக்கிறார்.அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய் ய, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கி றார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது