என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அனுபமா பரமேஸ்வரன் பாய்ச்சல்
தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஷ்வரன். தற்போது கிரேசி கல்யாணம் என்ற நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார்.படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக அனுபமா பரமேஷ்வரன் தனது
சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வரும் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியது,என்னுடைய சோசியல் மீடியாவில் என்ன பதிவிட வேண்டும் என நான் தான் முடிவு செய்கிறேன். இது ஒரு பெண்ணிற்கான மாற்றம். இதை செய்வதில் நான் பெருமை அடைகிறேன். என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இப்போது எல்லாவற்றையும் எனக்காக தேர்வு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக என் தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறேன். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை என கூறினார்.