Take a fresh look at your lifestyle.

இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் ‘நிறம் ’

2

இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் ‘நிறம் ’
கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில், இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நிறம்’ .இதில் முகேன்ராவ் ஹீரோவாக நடிக்க, பிரீத்தி அஸ்ரானி, தன்யா ஹோப் ஹீரோயினாக நடித்துள்ளனர்.மேலும் நிதின் சத்யா, சுரேகா வாணி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்ய,டி.இமான் இசை அமைத்துள்ளார். உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட பரபரப்பான கிரைம் திரில்லராக தயாராகி உள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழ்வில், இயக்குநர் பலராம் கிருஷ்ணா பேசியது, நிறம் என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றம் தான் இந்த படத்தின் மையக் கருத்து.இது ஒரு கிரைம் இன்வெஸ் டிகேஷன் திரில்லர் படம் என்றார்.