சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் மவுனி ராய்
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தற்போது இந்தியில் காதல் படம் ஒன்றை இயக்க உள்ளார். இதில் மவுனி ராய் கதாநாயகியாக நடிக்கிறார். பிரேர்ணா அரோரா படத்தை தயாரிக்கிறார்.இப்படம் பற்றி சுரேஷ் கிருஷ்ணா கூறியது, “இந்தக் கதையின் மையக் கதாபாத்திரத்துக்குத் தேவையான உணர்ச்சி ஆழத்தை, கண்ணியம், அழகு மற்றும் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தக்கூடிய ஒருவர் தேவைப்பட்டார். மவுனி ராய்தான் அதற்கான சரியான தேர்வு என்று உணர்ந்தேன்.அவர் அழகும், நேர்த்தியும் கொண்டவர் மட்டுமல்ல, திறமைமிக்க நடிகையும் ஆவார். அவர் இந்தப் படத்தில் இணைந்ததன் மூலம் இப்படம் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது”என்றார்.