Take a fresh look at your lifestyle.

லோகேஷ் கனகராஜ் படத்தில் ரெஜினா கசாண்ட்ரா

6

லோகேஷ் கனகராஜ் படத்தில் ரெஜினா கசாண்ட்ரா
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கத் தொடங்கியுள்ளார். அதோடு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இயக்கம், நடிப்பை தாண்டி தயாரிப்பாளராக உள்ள அவர், தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய படம் ஒன்றையும் தயாரிக்க விருக்கிறார். இந்த படத்தை பாம், சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இயக்க உள்ளார். இதில் ஹீரோயின் ஆக ரெஜினா கசாண்ட்ரா நடிக்க உள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் முதன் முதலில் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோயினாக ரெஜினா நடித்தது குறிப்பிடத்தக்கது.