சிங் கீதம்- விமர்சனம்
குபேரபுரம் என்கிற தங்கம் நிறைந்த கிராமத்திற்கு தனது தந்தையின் சொத்தை மீட்பதற்காக அயான் வருகிறார். அங்கு பேராசை பிடித்த கார்ப்பரேட் முதலாளிகள் கிராமத்தின் இயற்கை வளத்தை அழித்து சுரங்கம் தோண்ட ஒப்பந்தம் போட முயற்சி செய்கின்றனர்.அதற்காக அங்கு உள்ள பெரிய மரத்தை வெட்ட முயற்சிக்கின்றனர். அதை அகில்யா எவ்வளவோ தடுத்தும், மரத்தை வெட்டி விடுகின்றனர். இதனால் அந்த ஊர் மக்களுக்கு வினோத சாபம் ஏற்படட்டு அனைவரும் பேச்சுக்கு பதிலாக பாடத் தொடங்கி விடுகின்றனர். ஏன் அவர்களுக்கு அந்த சாபம் வந்தது? அவர்கள் பாடுவதை நிறுத்தினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இயற்கையை அழித்து பணம் சேர்க்க நினைக்கும் பலருக்கு ஒரு பாடமாக இந்த படத்தை இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் கொடுத்துள்ளார். இயற்கை வளங்களை அழித்து தங்க தேடல் என்ற விறுவிறுப்பான திரைக்கதையை 94 வயதில் சுவாரசியமாக இயக்கி சாதித்துள்ளார். நடிகர்கள் அயான், அகில்யா,ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன், வாம்சி என அனைவருமே அசத்தியுள்ளனர். அங்கூர் ஒளிப்பதிவும், தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.