Take a fresh look at your lifestyle.

அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் “குட் நியூஸ்”

65

அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் “குட் நியூஸ்”
மூவிட்ரான் புரொடக்ஷன் சார்பில் சாய் வினோத் மற்றும் ஜெயக்குமார் தயாரிக்கும் 2வது படத்துக்கு”குட் நியூஸ்” என டைட்டில் வைத்துள்ளனர். இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த நாகேந்திர முருகன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.இதில் அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கல்யாணி அனில் நடிக்கிறார். மேலும், ஜெயராம்,ஆஷா சரத்,முத்துக்குமார், ஜாஃபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு பிரவீண்குமார் ஒளிப்பதிவு செய்ய,.சித்துகுமார் இசையமைக்கிறார், சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் நடிகர் ஆர்யா உள்ளிட்ட திரை உலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். படத்தின் முதல் காட்சியை இயக்குநர் விஜய், க்ளாப் அடித்து துவக்கி வைக்க, இயக்குநர் பாலா கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.