காதல் முதல் விவாகரத்து வரை… திரிஷா சொல்லும் கருத்து!!
திருமண உறவு குறித்தும் விவாகரத்து குறித்தும் நடிகை திரிஷா ஏற்கனவே சொன்ன கருத்துக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. தக் லைஃப் பட புரோமஷன் நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷாவிடம் திருமணம் பற்றி கேட்டபோது, திருமணத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. நடந்தால் ஒன்றும் பிரச்னையில்லை, ஆனால், நடக்கவில்லை என்றாலும் நல்லதுதான். கையில் திருமண மோதிரம் அணிவதே, வாழ்வின் நிறைவுப் புள்ளி என்று பதிலளித்திருந்தார். அதேபோல் 2016ம் ஆண்டு அவர் அளித்த நேர்காணலில், விவாகரத்து என்பது காதலிசம் இல்லை, அது நடைமுறைவாதம். காதலில் விழுவது, திருமணம் செய்வது, பிறகு கருத்து வேறுபாட்டால் பிரிவது போன்ற உறவை தான் விரும்பவில்லை. காதலித்து ஒன்றாகவே வாழ்ந்து, வயதான காலம் வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவதாக கூறியுள்ளார்.
Next Post