Take a fresh look at your lifestyle.

தர்மன் ஷூட்டிங்கில் ரஜினி: புதிய போஸ்டர் வெளியீடு

60

தர்மன் ஷூட்டிங்கில் ரஜினி: புதிய போஸ்டர் வெளியீடு
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்குத் தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர். ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாகவுள்ள இப்படத்தில் ரஜினி டாக்டராக நடிக்கிறார்.இந்தப் படம் படையப்பா, வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்திருந்தார். நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகைகள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்ற உள்ளனர்.இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில் ரஜினி இதில் பங்கேற்று நடித்து வருகிறார்.சமீபத்தில் இதன் முதல் தோற்ற போஸ்டருக்கான மேக்கிங் விடியோவை வெளியிட்டிருந்தனர். தற்போது ரஜினியின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.அதில் டாக்டராக ரஜினி போஸ் கொடுக்கும் காட்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.