அனந்தன் காடு
1989-ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் தனது குடும்பத்தை இழந்த ஆர்யா, அங்கிருந்து தப்பித்து, தமிழகம் மற்றும் கேரள எல்லை பகுதியில் தஞ்சமடைகிறார். இங்கு கேரள முதல்வரின் சட்டத்துக்கு புறம்பான வேலைகளை போலீஸ் அதிகாரி சுனில் உத்தரவின் பேரில் இந்திரன்ஸ் தலைமையிலான கூலிப்படையினர் செய்து வருகின்றனர்.அவர்களிடம் அடைக்கலமாகு ம் ஆர்யா என்னவானார்? அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை. இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் எடுத்துக்கொண்ட கதைக்களம் அதை முரளி கோபி திரைக்கதையில் வடிவமைத்த விதம் நன்றாக இருந்தது.என்னதான் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்ந்தாலும், திரைக்கதையி ல் தெளிவு இல்லாததால் படம் பார்ப்பவர்க ளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆர்யா துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தை இழந்த ஈழத்தமிழனாக மிகவும் ஆக்ரோஷமாக நடித்துள்ளார். இந்திரன்ஸ், சுனில்,விஜயராகவன், முரளி கோபி, தேவ மோகன், நிகிலா விமல், அக்ஷய்குமார், சாந்தி பாலச்சந்திரன், போஸ் வெங்கட் ஆகியோரின் நடிப்பும் நன்றாக உள்ளது. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
