Take a fresh look at your lifestyle.

பெத்தி ஷாக்கிலிருந்து மீண்ட ஜான்விகபூர்

4

பெத்தி ஷாக்கிலிருந்து மீண்ட ஜான்விகபூர்
ராம்சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ படத்தில் நடித்திருந்த ஜான்வி கபூரின் கேரக்டர் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அவரும் அதிர்ச்சியில் இருந்ததாக தகவல் வெளியாது. அதோடு இயக்குனர் புச்சி பாபு மீதான விமர்சனங்களும் எழுந்தன.இதனால் பெத்தி படம் தொடர்பான எதையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடாமல் தவிர்த்து, சோசியல் மீடியாவிலும் தலை காட்டாமல் இருந்தார் ஜான்வி கபூர்.இந்நிலையில் தற்போது ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் மீண்டும் சோசியல் மீடியா செயல் பாடுகளில் ஈடுபட்டுள்ளார். தனது சகோதரி, செல்ல நாய் மற்றும் நண்பர்களுடன் செலவிட்ட நேரங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இதனால் அவர் தனது வழக்கமான அன்றாட நடவடிக்கைகளுக்கு திரும்பி இருப்பதை இது உணர்த்துகிறது.