Take a fresh look at your lifestyle.

சூர்யா படத்தின் “பட்டாம்பூச்சி”பாடல் ஹிட்டானது

2

சூர்யா படத்தின் “பட்டாம்பூச்சி”பாடல் ஹிட்டானது
சூர்யா நடிப்பில்,வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிளான “பட்டாம்பூச்சி நேனோ பட்டர்ஃப்ளை” என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் முறை கேட்கும்போதே மனதை கவரும் இனிமை யான பாடலாக மாறியுள்ளது. மெலடி பாடல்களை சிறப்பாக உருவாக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார், இதிலும் தனது மாயாஜால இசையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்தப் பாடலை சுபலக்ஷினி பாடியுள்ளார். இந்தப் படத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.