Take a fresh look at your lifestyle.

ஜூலை 3 ரிலீஸுக்கு தயாராகும் ‘நாகபந்தம்’

2

ஜூலை 3 ரிலீஸுக்கு தயாராகும் ‘நாகபந்தம்’
என்ஐகே ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள நாகபந்தம் படம் ஜூலை 3 ரிலீஸ் ஆக உள்ளது. இதையொட்டி நடந்த புரமோஷன் விழாவின் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயில் ரதயாத்திரை யை படக் குழுவினர் தொடங்கி வைத்தனர்.இதில் நாயகனாக விராட் கர்ணா நடிக்க, நாயகிகளாக, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் ஜெகபதி பாபு, மகேஷ் மஞ்ச்ரேகர், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் பல நூறாண்டுகளுக்கு முந்தைய போர் காலத்தையும், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.