ரசிகர்களுடன பிறந்த நாள் கொண்டாடிய மோகன்லால்
மோகன்லால்,மீனா நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம்-3 படம் கடந்த 21 ஆம் தேதி வெளியானது. அன்று மோகன்லால் பிறந்தநாள் என்பதால் பிறந்தநாளில் முதல் காட்சிக்கு அவரது மனைவி சுசித்ரா மற்றும் நடிகை மீனா, மகளாக நடித்துள்ள நடிகை எஸ்தர் அனில் ஆகியோருடன் வந்திருந்தார். படம் முடிந்த பிறகு ரசிகர்களுடன் சேர்ந்து தனது 66-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். நடிகை மீனா அவருக்கு கேக் ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்தார்.தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பேசிய மோகன்லால், இது ஒரு அற்புதமான பிறந்த நாள். ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய ஒன்று. அனைவருக்கும் திரிஷ்யம்-3 படம் பிடித்திருக்கும் என நம்புகிறேன். நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். மீனா, என் குடும்பத்தினர் மற்றும் எனது ரசிகர்கள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றி கூறுகிறேன் என்றார்.