Take a fresh look at your lifestyle.

ஆட்டோ டிரைவர்களை ஹீரோவாக காட்டும் நா வேற லெவல் ராப் பாடல்

54

ஆட்டோ டிரைவர்களை ஹீரோவாக காட்டும் நா வேற லெவல் ராப் பாடல்
மலேசிய தமிழ் ஹிப்ஹாப் ராப்பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என்ன பன்முக திறமை கொண்ட கிட் சாந்தே “நா வேற லெவல்” என்ற புதிய ராப் பாடலை தயாரித்து நடித்துள்ளார். இந்தப் பாடலை பார்த்திபன் ரவி இயக்கியுள்ளார். சோனி மியூசிக் நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது.சர்வதேச அளவில் வெளியாகி உள்ள இந்த ஆல்பம் குறித்து சென்னையில் நடந்த அறிமுக நிகழ்ச்சியில் கிட் சாந்தே பேசியது,இந்த பாடல் மூலம் என்னை ஹீரோவாக காட்ட விரும்பவில்லை. தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன். தினமும் மக்களை பாதுகாப்பாக ஒருஇடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது,என் கார் பஞ்சர் ஆகி நின்றது. ஒரு ஆட்டோ ஓட்டுநர் டயர் மாற்ற உதவிய அந்த தருணமே இந்த பாடலின் முழு கருத்தாக மாறியது என்றார்.“நா வேற லெவல்” பாடல் சோனி மியூசிக் யூ டியூப் தளத்தில் வெளியாகி உள்ளது.