Take a fresh look at your lifestyle.

டபுல் ஆக்குபென்சி ஃபர்ஸ்ட் சிங்கிள்

53

டபுல் ஆக்குபென்சி ஃபர்ஸ்ட் சிங்கிள்
இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டபுல் ஆக்குபென்சி. இதில்ஸசந்தோஷ்,ரேஷ்மா வெங்கடேஷ், சாம்யுக்தா விஸ்வநாத், வினோத் கிஷன்,வி.டி.வி கணேஷ்,பகவதி பெருமாள்,போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அவ்னி மூவீஸ் சார்பில் குஷ்பூ சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ் அருண் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ஷூட்டிங் முடிந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதைய ஜென்சி கிட்ஸ்களை கவரும் வகையில் இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புரொமோ டீசர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.