Take a fresh look at your lifestyle.

காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி பட ரிலீஸ் அப்டேட்

50

காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி பட ரிலீஸ் அப்டேட்
சேட்டன் டி.கே. இயக்கத்தில், சாகர் பி. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள படம் ‘தி இந்தியா ஸ்டோரி. இதில் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் நடித்துள்ளனர். ரசாயன பொருட்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகளை, குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து சார்ந்த விவசாயத்தில், அதன் தாக்கம் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான விளைவுகளை பற்றி இப்படம் உரக்க பேசுகிறது. எம்ஐஜி புரொடக்ஷன் அண்டு ஸ்டுடியோஸ் நிறுவன த்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.இப்படம் ஜூலை 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.