Take a fresh look at your lifestyle.

சின்ன திரையில் மீண்டும் ராதிகா

44

சின்ன திரையில் மீண்டும் ராதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா சரத்குமார்,சித்தி தொடரின் மூலம் சின்ன திரையில் கால் பதித்தார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலை, அரசி, தாமரை, சந்திரகுமாரி, வாணி ராணி, சித்தி -2 உள்ளிட்ட பல வெற்றித் தொடர்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தாய் கிழவி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனது நடிப்புத் திறனை மீண்டும் நிரூபித்துள்ள ராதிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் காலனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் ராதிகா பங்கேற்கவுள்ளார்.