Take a fresh look at your lifestyle.

ஏன் என்னை ஏதோ செய்தாய் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

48

ஏன் என்னை ஏதோ செய்தாய் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
டி .அந்தோணி தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம் ஏன் என்னை ஏதோ செய்தாய் . இதில் ஹீரோயினாக மும்பையை சேர்ந்த மதுமிதா தாஸ் நடித்துள்ளார். மியூசிக்கல் ரொமான்டிக் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. ஜூலை மாதம் ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் அந்தோணி கூறியது, தனிமையில் வாழ்ந்து வரும் ஹீரோ, தடம் மாறி செல்லும் போது அவரது வாழ்க்கையில் காதல் நுழைகிறது. அதன் பிறகு ஏற்பட்ட மாற்றம் தான் படத்தின் கதை. சினிமா மீது உள்ள ஆர்வத்தில் அமெரிக்கா வேலையை விட்டுவிட்டு வந்துள்ளேன். இதில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் புது முகங்கள் என்றார்.