ரஜினிகாந்த் பேசியது.
விஜய் முதல்வராவது ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் தான் வேறு சில அரசியல் வேலைகளில் ரஜினி ஈடுபடுகிறார் என்றும் சோசியல் மீடியாவில் பரபரப்பாக செய்திகள் வெளியானது. அதோடு ஏர்போர்ட்டில் விஜய் முதல்வரானது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒரு வாழ்த்து கூட ரஜினி சொல்லாமல் சென்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போலீஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளகளை சந்தித்தார். அப்போது ரஜினி கூறியதாவது, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்ன பத்தி ஒரு ரெண்டு மூணு விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் மற்றும் அரசியல் உலகத்தில பரவி வருகிறது. அதுக்கு நான் உடனே பதில் அளிக்கவில்லை என்றால் அது உண்மையாகிவிடும். நான் நேற்று முன்தினம் பெங்களூர் செல்லும்போது ஏர்போர்ட்டில் மீடியா யாராவது வந்து இருப்பீங்க விடை கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனா யாரும் இல்லை.திரும்பி வரும் போதும் அங்க மீடியா யாரும் இல்ல. சரி 18ம் தேதி கேரளாவில் ஷூட்டில் இருந்தது. அப்போது அதற்கு விடை கொடுக்கலாம் என்று இருந்தேன். ஆனா ஷூட்டிங் தள்ளிப் போய்விட்டது. இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் தப்பாகிவிடும் என்பதால் இன்று உங்களை அழைத்துள்ளேன்.
முதலாவதாக, தேர்தல் முடிவுகள் வந்தபோது நான் ஸ்டாலின் சாரை போய் பார்த்தேன் அது கொஞ்சம் விமர்சனங்கள் வந்துச்சு.. ஸ்டாலின் சார் என்னுடைய 38 ஆண்டுகளாக நண்பர் எங்களுடைய நட்பு கொள்கைகள்,அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் தோல்வி வெற்றி சகஜம். இருந்தாலும் ஸ்டாலின் சார் கொளத்தூரில் தோற்றது எனக்கு சங்கடமாக இருந்தது. அதற்காக நண்பன் என்ற முறையில் நட்பு ரீதியாக நான் போய் பார்த்தேன். அதுக்கு நான் விஜய் வந்து சிஎம் ஆக கூடாது. அவர் வரக்கூடாதுன்னு அதை தடுக்க பார்த்தேன். மேலும் வேறு ஏதோ ரெண்டு பெரிய கட்சிகளை சேர்த்து வைத்ததா சொல்றாங்க. என அப்படி இப்படின்னு சில விமர்சனங்கள் வருது. அந்த சூழ்நிலையில அப்படி எல்லாம் பேச முடியுமா? அப்படிப் பேச ரஜினிகாந்த் ஒரு தரம் கெட்ட ஆள் இல்லை. அதை நான் இங்கு தெளிவுபடுத்துகிறேன்.
இரண்டாவதாக, நான் விஜய்யை வாழ்த்த வில்லை என்று சொல்கிறார்கள். அவர் ஜெயிச்ச உடனே நான் எனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்கள் பதிவிட்டேன். எப்போதும் சென்னை ஏர்போர்ட்டில் மீடியாக்காரங்க இருப்பாங்க அவர்களுக்கு பதில் சொல்வது வழக்கம். அதேபோல் அன்று மீடியா இருக்காங்களான்னு கேட்டபோது இல்லை என்று சொன்னார்கள். திடீர் என்று ஒரு சின்ன போன் வைத்துக் கொண்டு ஒருவர் கேள்வி கேட்க அவர் மீடியாக்காரர் இல்லாதது போல் எனக்கு தெரிந்தது. திடீரென்று வந்து விஜய் சிஎம் ஆயிட்டாரு அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்று கேள்விகள் எழுப்ப,நான் ஷாக் ஆயிட்டேன். அவரு மீடியா மாதிரியே எனக்கு தெரியல. நான் சிரித்துக் கொண்டே போய் விட்டேன். அதற்கு நான் வாழ்த்து சொல்ல வில்லை என்று ஒரு விமர்சனம் வைக்கிறார்கள். மற்றொன்று விஜய் மேல் எனக்கு பொறாமை என்று சொல்கிறார்கள். நான் அரசியலில் இல்ல அரசியலில் இருந்து விலகி விட்டேன் நான் அரசியலில் இல்லாத போது எனக்கு ஏன் அவர் மேல் பொறாமை. ஒரு வேளை கமலஹாசன் முதலமைச்சராக வந்திருந்தா பொறாமை வந்திருக்குமோ, என்னவோ தெரியாது.. அப்போ கூட போட்டிதான் இருந்திருக்கும் பொறாமை வந்திருக்காது. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது…
எனக்கும் விஜய்க்கும் ஒரு ஜெனரேஷன் கேப் இருக்கு. கிட்டத்தட்ட 25 வருடம். நான் முதலிலேயே சொல்லி இருக்கேன் நான் வந்து விஜய கம்பேர் பண்ணா அது எனக்கு நல்லதல்ல, கெட்ட பேரு.. விஜய் என்ன கம்பேர் பண்ண அது அவருக்கு கெட்ட பேரு.. விஜய்யை நான் சின்ன வயசுல இருந்து பார்த்துகிட்டு இருக்கேன். அவர் முதலமைச்சர் ஆனதில் எனக்கு என்ன பொறாமை. அதுவும் இந்த சின்ன வயசுல 52 வயசுல, எம்ஜிஆர் என்டிஆர் சாதனை பண்ணத விட ஜாஸ்தி. கம்ப்ளிட்டா சென்டர் பிஜேபி. எவ்ளோ பெரிய பவர்ஃபுல் சென்டர். இங்க ரெண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆளா வந்து ஜெயிச்சிருக்காங்க. அதுவும் சினிமா இண்டஸ்ட்ரில இருந்து வந்திருக்காங்க. இதில் எனக்கு பொறாமை இல்ல, ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம். சோ எனக்கு பொறாமை இல்ல!. விஜய் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு ஜனங்க கிட்ட.. அந்த எதிர்பார்ப்பு எல்லாம் அவர் சிந்திச்சு மக்களுக்கு நல்லது செய்யணும். செய்வாங்க..!! என்ற நம்பிக்கை இருக்கு. அவருக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து அவரிடம் பத்திரிகையாளர்கள் இந்த பிரச்சனை குறித்துகேட்ட போது, விஜய் முதல்வரானது எனக்கு சந்தோசம் தான்.எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார். அடுத்து விஜய் பதவியேற்பு விழாவில் ஏன்பங்கேற்கவில்லை என்று கேட்டதற்கு, நான் யாருடைய பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதில்லை.
1996ம் ஆண்டு கருணாநிதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி என்னை அழைத்தார். நான் அப்போது ஊரில் இல்லை. பதவி ஏற்பு விழா முடிந்ததும் என்னை சந்திக்க வருவதாக கூறினார். அது சரியாக இருக்காது நானே வருகிறேன் என்று சொல்லி கோபாலபுரம் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினேன். அது தவிர சமீப காலங்களில் எந்த ஒரு பதவியேற்பு நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ளவில்லை என்றார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து ஒரு விஷயத்தை மறந்து விட்டதாக கூறிய ரஜினி, ஒரு முறை ஜெயலலிதா அவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வரணுமுன்னு ஆசைப்பட்டிருந்தாங்க நான் போயிருந்தேன் அது மட்டும் சொல்ல நினைத்தேன் மிஸ் ஆயிடுச்சு. நினைவு கூர்கிறேன். என்று ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினார்.
Prev Post
Next Post