ஹீரோயின் படங்களுக்கு பட்ஜெட் இல்லை: ஜோதிகா
நடிகை ஜோதிகா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது சிஸ்டம் என்ற வெப் தொடரில் நடிகை சோனாக்ஷி சின்காவுடன் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில்,நான் சினிமாைவ விட்டு விலகி இருந்த 8 ஆண்டு களில் விமன் சென்ரிக் கதைகள் அதிகம் வரவில்லை. அதற்கு பிறகு நான் ‘36 வயதினிலே’ படத்திலும், நயன்தாரா ‘மாயா’ படத்திலும் நடித்தோம். 2 படங்களும் ஓடின. 36 வயதினிலே படத்தின் பட்ஜெட் வெறும் ரூ.5 கோடி தான். படம் ரிலீஸ் ஆகி பெரும் லாபத்தை ஈட்டியது. இருப்பினும் பெண் கதாபாத்திர படங்களுக்கு பட்ஜெட் அதிகமாக கிடைப்பதில்லை என்றார்.
Next Post