காமெடி நடிகரின் சீரியஸ் வீடியோ
தமிழில் ஏராளமான படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் முத்துக்காளை. இவர் முதல்வர் விஜய்யுடன் மின்சார கண்ணா, தமிழன், யூத், பகவதி, சுறா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கண்ணீருடன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,எனது மனைவி மாலதி (வயது 47) தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது. தொடர்ந்து மூளையில் ஏற்பட்ட நோய் தொற்றினால் சுயநினைவின்றி, மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு கடந்த 17 நாட்களாக இருக்கிறார்.அவருக்கு உயர் சிகிச்சை அளித்து, அவரின் உயிரை காப்பாற்றி தர வேண்டும் என முதல்வர் விஜய்க்கு உருக்கமாக வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Post