பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்: மாளவிகா மோகனன்
பேட்ட, மாஸ்டர், தங்கலான் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தென்னிந்தியாவை தாண்டி தற்போது இந்தியிலும் நடித்து வரும் இவர், வெல்னஸ் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனமா ன கலர்ஸ் ஹெல்த் கேர் 2.0 என்ற கிளையை சென்னை ஈஸ்ட் அண்ணாநகரில் திறந்து வைத்து பேசியது, ஆரோக்கியமும் அழகும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் சத்துணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். இந்த விழாவில் அதன் நிர்வாக இயக்குநர் வெங்கட சிவாஜி,மேனேஜிங் டைரக்டர் டாக்டர் விஜய் கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர்.
Prev Post