Take a fresh look at your lifestyle.

இயக்குநராக அறிமுகமாகும் ராம் போதினேனி

74

இயக்குநராக அறிமுகமாகும் ராம் போதினேனி
தெலுங்கு திரை உலகில் எனர்ஜிடிக் நடிகராக அறியப்படும் ராம் போதினேனி,இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியார் படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டி ருக்கும் அவர், தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில் உருவாகும் படத்தில் வீரா என்ற கேரக்டரில் நடிப்பதுடன் அந்த படத்தையும் அவரே இயக்கி உள்ளார். இது அவரின் 23 வது படமாகும்.ராம் போதினேனியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் ஸ்டைலிஷ் போஸ்டருடன் படக்குழு இதை அறிவித்துள்ளது. சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.