ஹாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகவும் பிரியங்கா சோப்ரா
விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்காசோப்ரா. தொடர்ந்து பல மொழிகளில் நடித்து இந்திய திரை உலகில் முன்னணி நடிகை யாக இருக்கிறார். இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் பாடகர் நிக்ஜோனாசை திருமண ம் செய்து கொண்டு லாஸ் ஏஞ்சல்சில் வசித்து வருகிறார். தற்போது ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு உடன் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ஹாலிவுட் படமான ரீசெட் படம் வெளியானது. இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஆர்லாண்டோ புளுமுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்க இருக்கிறார். படத்தை மேட் ஸ்மக்லர் இயக்குறார். இதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டு மாதம் தொடங்க இருக்கிறது.
Next Post