Take a fresh look at your lifestyle.

மியூசிக் டைரக்டருக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்கூர்

35

மியூசிக் டைரக்டருக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்கூர்
தமிழ், தெலுங்​கில் முன்​னணி இசை அமைப்​பாள​ராக இருப்​பவர் தேவி ஸ்ரீ பிர​சாத். பல சூப்​பர் ஹிட் பாடல்​களைக் கொடுத்​துள்ள இவர், கதா​நாயக​னாக நடிக்​கும் படம் ‘எல்​லம்​மா’. இதை தெலுங்கில் வரவேற்பை பெற்ற ‘பல​காம்’ என்ற படத்தை இயக்கிய வேணு எல்​டண்​டாடி இயக்​கு​கிறார். ஸ்ரீவெங்​கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் தயாரிக்​கின்​றனர். இதில் பார்சி என்ற கதா​பாத்​திரத்​தில் தேவி ஸ்ரீ பிர​சாத் நடிக்​கிறார். இப்​படம் தெலுங்​கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் உரு​வாகிறது. இதில் சாய் பல்​லவி அல்​லது கீர்த்தி சுரேஷ் ஆகிய இரு​வரில் ஒரு​வர் கதா​நாயகி​யாக நடிப்​பார்​கள் என்று முதலில் கூறப்​பட்​டது. இப்​போது, மிருணாள் தாக்​கூரிடம் படக்​குழு பேசி வருவ​தாகத் தெரி​கிறது