விஷ்ணு விஷாலுக்கு ஜோடியான மமிதா பைஜூ
‘முண்டாசுப்பட்டி’, ’ராட்சசன்’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஷ்ணு விஷால், இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் உருவான படம் ‘இரண்டு வானம்’.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். கதைக்க ளம்,உருவாக்கம் மற்றும் வலுவான கூட்டணி போன்ற காரணங்களால் ’இரண்டு வானம்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரை உலகில் அதிகம் எதிர்பார்க்கப் படும் படமாக மாறி உள்ளது.படத்திற்க்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க,தினேஷ் கே. பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது.
Prev Post