காது கேட்காத தவளையாக இருக்கிறேன்: விக்ரம் பிரபு
அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த சிறை படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் தயாரித்திருந்தார். இதில் அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா நடைபெற்றது. இதில் விக்ரம் பிரபு பேசியது, ரஜினிகாந்த் சார் சொன்னது போல, காது கேட்காத தவளையாகவே சினிமாவில் பயணித்து வருகிறேன்.’கும்கி’யில் இருந்து ‘சிறை’ வரை, காது கேட்காத தவளையாகவே இருந்து வருகிறேன். வெற்றியும், தோல்வியும் சந்தித்து வருகிறேன்.சினிமாவில் உள்ள அரசியல் தட்டியும், தூக்கியும் விடும் ஆசாமிகள் என எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டுள்ளேன் என்றார்.
Next Post