Take a fresh look at your lifestyle.

98-வது ஆஸ்கர் விருது விழா

115

98-வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் சிறந்த படத்திற்கான விருதை ‘One Battle After Another’ தட்டிச் சென்றது. பலமுறை ஆஸ்கர் பரிந்துரை பட்டியலுக்குச் சென்றும் இதுவரை விருது வெல்லாத இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன், இந்தப் படத்திற்காகத் தனது முதல் ‘சிறந்த இயக்குநர்’ விருதைப் பெற்று நீண்ட காலக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். சுமார் 30 ஆண்டுகால திரைப்பயணத்தில், ‘பூகி நைட்ஸ்’, ‘தேர் வில் பி பிளட்’ போன்ற காவியப் படங்களை இயக்கியும் எட்டாத இந்த ஆஸ்கர் கனவு, தற்போது 14 பரிந்துரைகளுக்குப் பிறகு நனவாகியுள்ளது. இப்படத்திற்காகச் சிறந்த இயக்குநர் மட்டுமல்லாமல், ‘சிறந்த தழுவல் திரைக்கதை’ மற்றும் ‘சிறந்த படம்’ என மொத்தம் 3 தனிப்பட்ட ஆஸ்கர் விருதுகளை அவர் வென்று சாதனை படைத்துள்ளார். “நிஜமாகவே இதற்காக நான் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட ஆண்டர்சன், இந்த வெற்றியைத் தனது மறைந்த சகப்பணியாளர் ஆடம் சோம்னருக்கு அர்ப்பணித்தார். இந்தப் படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.