Take a fresh look at your lifestyle.

மியூசிக்,சவுண்ட் இரண்டிலும் கலக்கும் அமர்கீத்

119

மியூசிக்,சவுண்ட் இரண்டிலும் கலக்கும் அமர்கீத்
சேரன் பாண்டியன், சிந்து நதி பூ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்த பிரபல இசை அமைப்பாளர் சவுந்தர்யனின் மகன் அமர்கீத், அப்பாவைப் போல இசையமைப்பாளராகி பல படங்களுக்கு பணியாற்றி வருகிறார்.
இசை மட்டுமின்றி ‘சவுண்ட்’மிக்ஸிங் செய்து தரும் இவர், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சவுண்ட் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இவர் இசையில் வெளியான மையல் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது எம் எஸ் மூர்த்தி இயக்கத்தில், ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் வெளியாகி உள்ள 99/66 படத்தில் ‘சவுண்ட்’மிக்ஸிங் செய்து கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தற்போது சினிமாவில் சவுண்டுக்கு அதிக முக்கியத்து வம் கொடுக்கப்படுகிறது திகில் படமான 99/66 படத்தில் சவுண்ட் பேசப்படுகிறது. படத்தை பார்த்து விட்டு பலர் பாராட்டினர். அதோடு புதிய படங்களில் இசை அமைக்க
பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதிய படங்களுக்கு இசை மற்றும் சவுண்ட் டிசைன் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.