முஸ்தபா முஸ்தபா ஜாலியான படம்: சதீஷ்
இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் கதைநாயகனாக நடித்துள்ள படம் ’முஸ்தபா முஸ்தபா’. தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். நாளை 6 ம் தெறி ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நடிகர் சதீஷ் பேசியது,“ முஸ்தபா முஸ்தபா என்றாலே நமக்கு எல்லாம் நட்பு பாடல் தான் நியாபகம் வரும். அதனை மனதில் கொண்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தில் கதை அமைத்திருக்கிறோம். அதனால், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஜாலியாக சென்று பார்க்கலாம். பல பெரிய படங்களை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை வெளியிடுகிறது .இது நிச்சயம் ஜாலியான ஒரு படமாக இருக்கும் என்றார்.
Prev Post
Next Post