Take a fresh look at your lifestyle.

லீடர் டீசரை தெறிக்கவிட்ட லெஜெண்ட் சரவணன்

64

லீடர் டீசரை தெறிக்கவிட்ட லெஜெண்ட் சரவணன்
தி லெஜன்ட் படத்திற்கு பிறகு நடிகர் லெஜண்ட் சரவணன்,முன்னணி இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வந்தார். கடந்த மாதம் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. லீடர் என்ற டைட்டிலுடன், ஆக்ஷன் லுக்கில் லெஜெண்ட் சரவணன் இதில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து லீடர் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் பரபரப்பான ஆக்ஷனில் இறங்கி அதிரடி காட்டியுள்ளார் சரவணன். இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது.