Take a fresh look at your lifestyle.

நல்ல தமிழ் படங்களில் நடிக்க ஆசை: பாயல் ராஜ்புத்

78

நல்ல தமிழ் படங்களில் நடிக்க ஆசை: பாயல் ராஜ்புத்
இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் பங்கேற்று பேசினார். அவர் வணக்கம் சென்னை எப்படி இருக்கீங்க… என தமிழில் பேசினார். தமிழ் ரசிகர்கள் அளிக்கும் அன்பு மிகவும் தனித்துவமானது. தமிழ் சினிமாவில் மேலும் பல நல்ல படங்களில் நடிக்க ஆசை இருக்கிற து என்றார்.வட மாநில நடிகையான பாயல் ராஜ் புத் தமிழில் பேச தொடங்கியதும் ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.
இந்த படத்தில் பாயல் ராஜ்புத் ஹீரோயின் ஆக நடிக்கிறார், மேலும் ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசை அமைக்க,எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்