Take a fresh look at your lifestyle.

‘யூத்’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட சிம்பு

71

‘யூத்’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட சிம்பு
பாடகர்,இசைக்கலைஞர்,நடிகர் என பன்முக திறமை கொண்ட கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும் ‘யூத்’ படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர். வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.பார்வதா என்டர்டெய்ன்மெ ன்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இதில் கென் கருணாஸ்,சுராஜ் வெஞ்சாரமூடு , தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ் ஆகியோருடன் நடிகை நளினி மீண்டும் படத்தில் ரீ என்ட்ரி ஆகிறார். இந்த படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜி வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி பல மில்லியன் பேர் ரசிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 19 ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.