நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?: மீனா ஆவேசம்
நடிகை மீனா 2-வது திருமணம் செய்து கொள்ள போகிறார் என அடிக்கடி சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இது குறித்து நடிகை மீனா ஆவேசத்துடன் அளித்த பேட்டியில், எனக்கு 2-வது திருமணம் என பரவும் வதந்திகள் என்னை ரொம்ப காயப்படுத்து கிறது. முன்பு என்னை பற்றிய வதந்திகள் எனக்கு தெரிவதற்கு ரொம்ப தாமதமாகும். ஆனால் இப்போது சோசியல் மீடியாவால் உடனே தெரிந்து விடுகிறது. நான் ஒரு பெண் செலிபிரிட்டி, தனியாக இருக்கிறேன் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? கேட்பதற்கு ஆள் இல்லை என்று இப்படி செய்கிறீர்களா? என தனது ஆதங்கத்தை கொட்டினார்.
Next Post