Take a fresh look at your lifestyle.

யோகி பாபுவின் “கெணத்த காணோம்” பர்ஸ்ட் லுக்

85

யோகி பாபுவின் “கெணத்த காணோம்” பர்ஸ்ட் லுக்
யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள “கெணத்த காணோம்” படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. ஜியோ ஹாட் ஸ்டார் வழங்கும் இப்படம் விரைவில் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா சமீபத்தில் காலமான தால், இந்த வெளியீடு முக்கியத்துவம் கொண்டுள்ளது. இவர் இயக்கிய “ஒரு கிடாயின் கருணை மனு” மற்றும் “சத்ய சோதனை” ஆகிய படங்கள் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. இதில் யோகி பாபு உடன் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி,ஹலோ கந்தசாமி, கலை பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமை க்க, தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை ஆர். ரமேஷ் பாபு,ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.