Take a fresh look at your lifestyle.

சீதா பயணம் -விமர்சனம்

81

சீதா பயணம் -விமர்சனம்
சத்யராஜின் ஒரே மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மதுரையில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக காரில் செல்கிறார். அந்த பயணத்தின் போது வழியில் நிறைய பேரை சந்திக்கிறார்.அதோடு ஒரு விபத்திலிருந்தும் தப்பிக்கிறார். அதற்கு காரணமானவர்களை நேரில் சந்தித்து நன்றி சொல்லசெல்கிறார். அந்த பயணத்தில் நடைபெறும் சம்பவங்கள் தான் படத்தின் மீதி கதை. இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள அர்ஜுன், தனது மகள்
ஐஸ்வர்யாவுக்காக குடும்பம், பாசம் என எமோஷனல் கலந்த கதையை பயணமாக இயக்கியுள்ளார். ஹீரோயின் ஐஸ்வர்யா அர்ஜுன் சிறப்பான நடித்துள்ளார் ஹீரோ நிரஞ்சன் கதைக்கு பொருத்தமான தேர்வு.சத்யராஜ், பிரகாஷ் ராஜ், கோவை சரளா ஆகியோருடன் கன்னட நடிகர் துருவா சர்ஜா கேமியோ ரோட்டில் வந்து மிரள வைக்கிறார். அனுப் ரூபனின் இசை,பால முருகன் கேமரா ரசிக்க வைக்கிறது.