பிரஜின், புகழ் இணைந்து நடிக்கும் “ஊருக்கு ரெண்டு ஊதாரி ”
ஏஆர்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம் மற்றும் ஈகோபி மைன் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் வினோத் பெருமாள் இருவரும் சேர்ந்து தயாரிக்கும் காமெடி படத்திற்கு ” ஊருக்கு ரெண்டு ஊதாரி ” என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தை யோகேஸ்வரன் மைனர் இயக்குகிறார். இதில் நடிகர்கள் பிரஜின், புகழ் இருவரும் ஹீரோவாக நடிக்கின்றனர்.
ஜனனி கதாநாயகியாக நடிக்க, விக்ரம் விஜய் என்பவரும் அறிமுகமாகிறார். மேலும் ரவிமரியா, மைம்கோபி, தீபா சங்கர், அபிதா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பட குழுவை வாழ்த்தினார்.