Take a fresh look at your lifestyle.

ஜூஹி சாவ்லாவுக்கு 13 ஆண்டாக ஹிட் படம் இல்லை..ஆனால் ரூ.4600 கோடி சொத்து!!

131

ஜூஹி சாவ்லாவுக்கு 13 ஆண்டாக ஹிட் படம் இல்லை..ஆனால் ரூ.4600 கோடி சொத்து!!
கடந்த 1986-ம் ஆண்டு தர்மேந்திரா நடிப்பில் வெளியான ‘சுல்தானத்’ திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜூஹி சாவ்லா. தொடர்ந்து பாலிவுட் நடிகர்களுடன் நடித்து கவனம் ஈர்த்தவர். 1988-ம் ஆண்டு ஆமீர்கான் நடிப்பில் வெளியான ‘கியாமத் சே கியாமத் தக்’ படம் ஜூஹி சாவ்லாவுக்கு அடையாளம் பெற்று கொடுத்தது.கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ரஜினியின் ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ படத்தில் நடித்திருந்தார். பெரும்பாலும், இந்தி, பஞ்சாபி, மலையாள படங்களில் நடித்துள்ளார் ஜூஹி சாவ்லா. ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் 13 ஆண்டுகளாக எந்த ஹிட் படத்தையும் கொடுக்க வில்லை. இருப்பினும் இந்தியாவின் பணக்கார நடிகையாக அவர் திகழ்கிறார். சமீபத்திய அறிக்கையின் படி, அவரின் சொத்து மதிப்பு ரூ.4,600 கோடியாம்.