மீண்டும் தமிழ் படத்தில் மம்முட்டி
ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட்டுகள் நாள்தோறும் வந்து ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது. ஏற்கனவே படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர், ஹீரோயின்களாக ஸ்ரீ லீலா மற்றும் சாய் பல்லவி கமிட்டானார்கள். இந்த நிலையில் மலையாளத்தில் மிகப்பெரிய நடிகராக உள்ள மம்முட்டி இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான உடன் தனுஷ் ரசிகர்கள் மற்றும் மலையாள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது தனுஷ் படங்களுக்கு மலையாளத்திலும் வரவேற்பு இருப்பதால் மம்முட்டியை இதில் கொண்டு வந்துள்ளனர். தனுஷ் 55 வது படமாக உருவாகும் இதை அவரின் வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கிறது.
Prev Post
Next Post